» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கவிதை நூல் வெளியீடு

வியாழன் 30, ஜூன் 2022 10:09:17 AM (IST)தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக நடைபெற்ற தேசிய புள்ளியியல் தினவிழாவில் கவிதை நூல் வெளியிடப்பட்டது. 

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பாக நேற்று தேசிய புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி கொடுக்கப்பட்ட தலைப்புகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான    "கணிதவியல் 360° இரவானாலும், பகலானாலும்"  என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது.

விழாவில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் கல்லூரியின் பயின்றுனர் கழக உறுப்பினருமான தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,கவிதை புத்தகத்தை வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். புத்தகத்தின் முதல் பிரதியை கல்லூரி முதல்வர் கனகராஜ் பெற்றுக்கொண்டார். பேராசிரியை சாந்திதேவி கணிதமும் மழலையும் என்ற தலைப்பில் கவிதை தர மாணவ ஆசிரியர்கள் சிலர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். 

விழாவில் கல்லூரி  இணைப்பேராசிரியர் இரசூல் முகைதீன் வாழ்த்துரை வழங்கினார். விழாவை மாணவ ஆசிரியர்கள் தேவநேசம், கின்ஸ்லின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். முன்னதாக மாணவ ஆசிரியை முத்துமாரி வரவேற்புரை ஆற்றினார். இணைப் பேராசிரியை பிரேமலதா அறிமுக உரை ஆற்றினார். நிறைவாக மாணவ ஆசிரியை ஈஸ்வரி நன்றியுரை ஆற்றினார்.  விழா ஏற்பாடுகளை இணைபேராசிரியை பிரேமலதா, பேராசிரியை சாந்தி தேவி ஆகியோர் செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory