» சினிமா » செய்திகள்

லோகேஷ் கனகராஜ் படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினி

சனி 10, பிப்ரவரி 2024 4:21:12 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி 'லால் சலாம் திரைப்படம் மக்களுக்கு பிடித்துள்ளதாக சொல்கிறார்கள். மிகப் பெரிய வெற்றியடைந்திருந்திருக்கிறது. இதனைத் தயாரித்த லைகா புரடக்‌ஷனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வாழ்த்துகள். லால் சலாம் படக்குழுவுக்கும் வாழ்த்துகள். வேட்டையன் படம் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. 20 சதவிகிதம் இன்னும் மீதமிருக்கிறது. அடுத்தப்படம் லோகேஷின் படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென ரஜினி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory