» சினிமா » செய்திகள்

நடிகர் சங்க கட்டிட பணிக்காக நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி

திங்கள் 29, ஏப்ரல் 2024 4:24:59 PM (IST)

நடிகர் சங்க கட்டிட வளர்ச்சிக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். 

நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர். மேலும், பல்வேறு நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் நெப்போலியன், நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடியை வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory