» சினிமா » செய்திகள்
இயக்குநர் சேரன் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!
புதன் 24, ஏப்ரல் 2024 12:09:28 PM (IST)

திரைப்பட இயக்குநர் சேரனின் மூத்த மகள் திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திரைப்பட இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு சுரேஷ் ஆதித்யா என்பவருடன் நேற்று முன் தினம் சென்னை, மயிலாப்பூரில் திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்தை இயக்குநர்கள் ரவிக்குமார், பாரதிராஜா, சீமான் ஆகியோர் முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சேரன்.
திருமணத்தில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 'வெற்றிக்கொடி கட்டு’, ‘பொற்காலம்’ போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய சேரன் நடிகராகவும் முத்திரை பதிக்க தவறவில்லை. சமீபத்தில் ‘குடிமகன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சேரன்ஸ் ஜர்னி’ என்ற சீரிஸை இயக்கி ஓடிடியிலும் தடம் பதித்தார். இப்போது கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதுமட்டுமல்லாது, பாமக தலைவர் ராமதாஸ் பயோபிக்கையும் இயக்க இருக்கிறார் சேரன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)

எனது தாயார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை : பாடகி கல்பனாவின் மகள் விளக்கம்
வியாழன் 6, மார்ச் 2025 11:17:07 AM (IST)

டிராகன் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு!
புதன் 5, மார்ச் 2025 4:05:23 PM (IST)
