» சினிமா » செய்திகள்

சினிமாவை விட்டு விலகி புத்த துறவியான நடிகை..!!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 8:27:38 PM (IST)

பிரபல இந்தி நடிகை பார்க்கா மதன், சினிமாவை விட்டு விலகி புத்த துறவியாக மாறி உள்ளார்.

பிரபல இந்தி நடிகை பார்க்கா மதன். இவர் 1996-ல் திரைக்கு வந்த ‘கிலாடியோன் கா கிலாடி' படத்தில் அக்‌ஷய்குமார் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றது. ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நடித்த ‘பூட்' படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. மேலும் பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பார்க்கா மதன் மாடலிங் துறையில் இருந்தார். 1994-ல் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகு போட்டியில் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோருடன் போட்டியிட்டார். இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதிலேயே தலாய்லாமா கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பார்க்கா மதன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகி புத்த மதத்தை தழுவப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில் பார்க்கா மதன் தற்போது புத்த துறவியாக மாறி உள்ளார். கர்நாடகாவில் உள்ள புத்த மடாலயத்தில் துறவியாக மாறி தனது பெயரை கைல்டென் சம்டென் என்று மாற்றிக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory