» சினிமா » செய்திகள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சனி 3, பிப்ரவரி 2024 3:44:20 PM (IST)
நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பிப்.9ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் - இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ஆக்சன் பாணியில் உருவான கேப்டன் மில்லர் பொங்கல் வெளியீடாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ஜன.12ம் தேதி வெளியானது. ஆலய நுழைவுப் போராட்டம், அதிகாரத்துக்கு எதிரான புரட்சி என உருவான இப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலகளவில் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து, தெலுங்கில் வெளியானது. இப்படம் உலகளவில் ரூ.105 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் பிப்.9ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாடல்களில் பெண்களை இழிவுபடுத்துவதா? தெலுங்கு சினிமாவுக்கு, மகளிர் ஆணையம் எச்சரிக்கை!
ஞாயிறு 23, மார்ச் 2025 9:51:12 AM (IST)

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படப்பிடிப்பு நிறைவு: படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:23:59 PM (IST)

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
திங்கள் 17, மார்ச் 2025 11:56:58 AM (IST)

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)
