» சினிமா » செய்திகள்

நான் உயிருடன் இருக்கிறேன்..' - நடிகை பூனம் பாண்டே விளக்கம்!

சனி 3, பிப்ரவரி 2024 3:24:44 PM (IST)

"நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன்"  என நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக நேற்று வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவலை பூனம் பாண்டேவின் மேலாளர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு பதிவு வெளியாகியுள்ளது. அதில், நடிகை பூனம் பாண்டே, "நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏராளமான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இது முற்றிலும் தடுக்கக்கூடிய நோயாகும். இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நோயால் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் நடிகை பூனம் பாண்டே, தான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த தகவலால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தாலும், விளம்பரத்திற்காக பூனம் பாண்டே இப்படி செய்துள்ளதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory