» சினிமா » செய்திகள்

சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது: பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த குஷ்பூ!

வியாழன் 18, ஜனவரி 2024 5:25:22 PM (IST)

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பாக பாடகி சித்ராவுக்கு நடிகை குஷ்பூ ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். 

பிரபல பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா (60). தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை வென்றவரான பாடகி சித்ரா, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், கும்பாபிஷேக விழா நடைபெறும்போது, அன்றைய நாளின் நண்பகல் 12.20 மணியளவில், ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெயஜெயராமா என்று ஒவ்வொருவரும் மந்திரம் கூற வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலையில் மக்கள் ஏற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

அவருடைய இந்த பதிவுக்கு சமூக ஊடகத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற செய்தியை வெளியிட்டு, அரசியல் பக்கம் அவர் சார்ந்து விட்டார் என விமர்சனங்களையும் வெளிப்படுத்தினர். இந்நிலையில் பாடகி சித்ராவுக்கு நடிகை குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கதில் ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். 

அவர் அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது. அவர்களால் ஒருவரின் நம்பிக்கைகளை மதிக்க முடியாது மற்றும் அதை ஏற்றுக்கொள்ளவும் தைரியம் கிடையாது. இது எனது வழி அவர்களுக்கு அனுமதி இல்லை. பாடகி சித்ரா அவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் திரிச்சூரில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த, மகளிருக்கு அதிகாரமளித்தல் என்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷோபனா பங்கேற்றார். இதற்காக குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராக தீவிர விமர்சனங்களை வெளியிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், திரையிசை பாடகி சித்ராவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் எதிர்ப்பு வலுத்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education




Thoothukudi Business Directory