» சினிமா » செய்திகள்

விடுதலை படக்குழுவினரை நேரில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

சனி 8, ஏப்ரல் 2023 11:59:33 AM (IST)



விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 31ம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை. விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், விடுதலை படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். 

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். "விடுதலை.. இதுவரை தமிழ்த்திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு- பிரமிப்பு. இளையராஜா- இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்". இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory