» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம் - பிரப்சிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:03:26 PM (IST)

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்து இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த பெருமை சஞ்சு சாம்சனுக்கு உண்டு. எனினும், இதன்பின் இந்திய அணிக்காக ஆடிய 3 போட்டிகளில் சஞ்சு சாம்சனால் போதிய ரன்கள் சேர்க்க முடியவில்லை.
இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டு, வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த முடிவால் அதிருப்தியடைந்த சஞ்சு சாம்சன், பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் நேரடியாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இச்சூழ்நிலையில் தற்போது ஜிம்பாப்வே தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் முதன்மை விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட இடத்தில் பிரப்சிம்ரன் சிங் பேக் அப் விக்கெட் கீப்பராகக் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்திய ஏ அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வரும் பிரப்சிம்ரன் சிங்கின் கடின உழைப்பிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவரின் தேர்வுக்குப் பின்னணியில் ஐபிஎல் தொடர் முக்கியப் பங்காற்றியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வருவதன் மூலமாக, அவர்களின் மார்க்கெட் ரேட் உயரும் என்பதும் அணி நிர்வாகங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)

காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ஜண்டு குமாருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 25, ஜூலை 2026 4:14:59 PM (IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி: வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:39:11 PM (IST)

4 தொடர்களில் 3-இல் தோல்வி: சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து எழும் விமர்சனங்கள்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:22:23 PM (IST)

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)








