» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் போட்டி வடிவங்களை மாற்றியமைக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) வருடாந்திர கூட்டம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களின் போட்டி வடிவங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் 14 அணிகள் பங்கேற்கும். இத்தொடர் சூப்பர் சீரிஸ், குரூப் ஸ்டேஜ், சூப்பர் 7, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என 4 சுற்றுகளாக நடத்தப்படும்.
சூப்பர் சீரிஸ்: 12, 13 மற்றும் 14-வது இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் ஸ்டேஜ்: 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு (ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள்) ரவுண்ட் ராபின் முறையில் 30 போட்டிகள் நடைபெறும்.
சூப்பர் 7: இரு பிரிவுகளிலும் தலா 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், சிறந்த நிலையில் உள்ள மேலும் ஒரு அணியும் இணைந்து மொத்தம் 7 அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் 21 போட்டிகளில் விளையாடும். இதிலிருந்து 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
2028 டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பைத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று மொத்தம் 55 போட்டிகள் நடைபெறும்.
குரூப் ஸ்டேஜ்: அணிகள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு (பிரிவுக்கு 4 அணிகள்) ரவுண்ட் ராபின் முறையில் 30 போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் மொத்தம் 10 அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
சூப்பர் 10 மற்றும் எலிமினேட்டர்: 10 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் (பிரிவுக்கு 5 அணிகள்). இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெறும்.
எஞ்சிய 2 அரை இறுதி அணிகளைத் தேர்வு செய்ய ஐபிஎல் பாணியில் எலிமினேட்டர் சுற்றுகள் நடத்தப்படும். இரு பிரிவிலும் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டங்களில் மோதி, வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)








