» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்க முதலே இரு அணி வீரர்களும் இலக்கைக் நோக்கிப் பந்துகளைச் செலுத்தினர். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த அணியின் வீரர் ஒயார்சபால் முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பிரான்ஸ் அணி பதில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் அணி வீரர்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ போரோ இரண்டாவது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையைப் பெற்றது. ஆட்ட நேர இறுதி வரை பிரான்ஸ் வீரர்களால் பதில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. தோல்வியடைந்த பிரான்ஸ் அணி 3-வது இடத்திற்கான போட்டியில் விளையாடவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)

காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ஜண்டு குமாருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 25, ஜூலை 2026 4:14:59 PM (IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி: வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:39:11 PM (IST)

4 தொடர்களில் 3-இல் தோல்வி: சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து எழும் விமர்சனங்கள்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:22:23 PM (IST)

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)








