» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் மும்பை அணி சாம்பியன்!

வியாழன் 14, மார்ச் 2024 4:18:33 PM (IST)



ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா அணியை வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முஷீர் கான் 136, அஜிங்க்ய ரஹானே 73, ஸ்ரேயஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்தனர்.

538 ரன்கள் இலக்குடன் பேட் செய்த விதர்பா அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 92 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. அதர்வா டைடே 32, துருவ் ஷோரே 28, அமன் மோகடே 32, யாஷ் ரத்தோட் 7 ரன்களில் நடையை கட்டினர். கருண் நாயர் 220 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் அக்ஷய் வத்கர் 56, ஹர்ஷ் துபே 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 290 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது விதர்பா அணி.

538 ரன்கள் இலக்கை துரத்திய விதர்பா அணி இறுதியில் 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மதிய உணவு இடைவேளை வரை பொறுமையாக ஆடிய விதர்பா வீரர்கள் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

கேப்டன் அக்‌ஷய் வத்கர் சதமடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்ஷ் துபே 67 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில், 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது விதர்பா அணி. இதன்மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக முஷீர் கானும், தொடர் நாயகனாக தனுஷ் கோடியானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory