» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு!

திங்கள் 29, ஜனவரி 2024 5:51:16 PM (IST)



தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை விமானத்தில் சந்தித்துள்ளார். 

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனத் தெரிகிறது. முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினின் இந்த பயணம் மூலம் பல்வேறு தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஸ்பெயின் செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துள்ளார். விமானத்தில் வைத்து ஜோகோவிச்சை சந்தித்ததாக தனது எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory