» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் இந்திய அணி வெற்றி: ரோகித் சர்மா உலக சாதனை...!

வெள்ளி 12, ஜனவரி 2024 4:12:36 PM (IST)



சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணிக்காக தம்முடைய கேரியரில் இதுவரை 149 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 100 முறை இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் 100 வெற்றிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த வரிசையில் 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் (86 வெற்றிகள்) உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory