» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்: 55 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

புதன் 3, ஜனவரி 2024 4:14:08 PM (IST)



இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory