» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு

திங்கள் 1, ஜனவரி 2024 11:38:58 AM (IST)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவரான  டேவிட் வார்னர், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர்(37). துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டேவிட் வார்னர், 161 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் 6,932 ரன்கள் குவித்துள்ளார். 

இருப்பினும் இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள வார்னர் ஒருநாள் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  அதிரடி வீரர் வார்னரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory