» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார் சதம், குல்தீப் 5 விக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

வெள்ளி 15, டிசம்பர் 2023 4:00:23 PM (IST)



தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு மட்டுமின்றி சுழற்பந்து வீச்சுக்கும் சாதகமானதாக இருப்பதாக இந்திய அணியின்  குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. 

இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அவருக்கு முன்னதாக புவனேஷ்குமார் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் இருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்த நிலையில்,  தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு மட்டுமின்றி சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமானதாக இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது. நான் 5 விக்கெட்டுகள் எடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அணியின் வெற்றிதான் எனக்கு மிகவும் முக்கியம். நான் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு விளையாடுவதால் எனது பந்துவீச்சு குறித்து கவனமாக இருந்தேன். இந்த நாள் எனக்கு மிகச் சரியான நாளாக அமைந்துள்ளது. நன்றாக பந்துவீச முடிந்தது. ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கும் பொருத்தமானதாகவே இருந்தது என்றார்.  நேற்று குல்தீப் யாதவின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory