» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விஜய் ஹசாரே அரை இறுதி : ஹரியாணாவிடம் தமிழ்நாடு அணி தோல்வி!

வெள்ளி 15, டிசம்பர் 2023 11:14:00 AM (IST)

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஹரியாணாவிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தமிழ்நாடு அணி.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹரியாணா 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 293 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹிமான்ஸு ரானா 118 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 116 ரன் விளாசினார்.

294 ரன்கள் இலக்குடன் பேட்செய்த தமிழ்நாடு அணி 47.1 ஓவரில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 31, நாராயண் ஜெகதீசன் 30, சாய் கிஷோர் 29, விஜய் சங்கர் 23 ரன்களில் நடையை கட்டினர். ஹரியாணா அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory