» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

புதன் 13, டிசம்பர் 2023 12:40:04 PM (IST)

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 

இதில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் எழுச்சி பெற்ற இந்திய அணி பிற்பாதி ஆட்ட நேரத்தில் தீவிர முனைப்புடன் விளையாடி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது. பிற்பாதி ஆட்ட நேரத்தில் இந்திய அணி 4 கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் நெதர்லாந்து அணி 1 கோல் மட்டுமே அடித்தது. இதன் மூலம் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி தரப்பில் ஆதித்யா, அரைஜீத் சிங், சவுரப் ஆனந்த் மற்றும் உத்தம் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் டிமோ பீர்ஸ், பிபின் வான்டெர் மற்றும் ஆலிவர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.மற்ற காலிறுதி ஆட்டங்களில் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-ஜெர்மனி, பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory