» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி:டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியா!

சனி 30, செப்டம்பர் 2023 5:10:17 PM (IST)ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும்   ஸ்குவாஷ் ஆடவர் அணி தங்கம் வென்று  அசத்தியது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 8-வது நாளான இன்று ஸ்குவாஷ் ஆடவர் அணிப்பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் சௌரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றனர்.  

இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரோகன் போபன்னா, ருதுஜா போஸ்லே இணை 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்துடன் 8-வது நாளான இன்று வரை இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி 13 வெண்கலம் என 36 பதக்கங்களை வென்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory