» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் உலக சாதனையை முறியடித்த சீன வீராங்கனை!

வியாழன் 7, செப்டம்பர் 2023 12:42:48 PM (IST)



உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின்  மீராபாய் சானுவின் உலக சாதனையை சீன வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா முறியடித்தார்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பெண்களுக்கான 49 கிலோ கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 120 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனையான ஜியாங் ஹுய்ஹுவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் இதே பிரிவில் இந்திய வீராங்கனை மீராபய் சானு, 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில், 119 கிலோ தூக்கியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்து சீன வீராங்கனை புதிய உலக சாதனை படைத்துள்ளார். சீனாவின் மற்றொரு வீராங்கனையான ஹூ ஜிஹுய் ஸ்னாட்ச் பிரிவிலும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் (95 கிலோ +120 கிலோ) 215 கிலோ எடையை தூக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இது முந்தைய சாதனையை (213 கிலோ) விட இரண்டு கிலோ அதிகமாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory