» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழருக்கு இடமில்லை!
புதன் 6, செப்டம்பர் 2023 5:43:19 PM (IST)
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வீரர்கள் இடம் பெறாத 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு பிறகு, 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ️இதற்கு முன்னதாக 2003ம் ஆண்டுக்கான அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெறவில்லை. 2007ல் தினேஷ் கார்த்திக், 2011ல் அஸ்வின், 2015ல் அஸ்வின், 2019ல் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.