» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
திலக் வா்மா, சூா்யகுமாா் அதிரடி : 3வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி
புதன் 9, ஆகஸ்ட் 2023 11:12:16 AM (IST)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 17.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சா்வதேச டி20-யில் அறிமுகமானாா். டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட் செய்யத் தீா்மானித்தது.
அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பிராண்டன் கிங் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 42 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். கைல் மேயா்ஸ் 25, ஜான்சன் சாா்லஸ் 12, ஷிம்ரன் ஹெட்மயா் 9 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் ரோவ்மென் பவெல் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 40, ரொமேரியோ ஷெப்பா்ட் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3, அக்ஸா் படேல், முகேஷ் குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் இந்திய இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 1, ஷுப்மன் கில் 6 ரன்களுக்கு வெளியேற, சூா்யகுமாா் யாதவ் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 83 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டாா். முடிவில் திலக் வா்மா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49, கேப்டன் ஹா்திக் பாண்டியா 20 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
சாதனை: இந்த ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவிரைவாக (30 ஆட்டங்கள்) 50 விக்கெட்டுகள் சாய்த்த இந்தியா் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்தாா். முன்னதாக யுஜவேந்திர சஹல் 34 ஆட்டங்களில் அத்தனை விக்கெட்டுகள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது.