» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது இந்திய அணி!

செவ்வாய் 25, ஜூலை 2023 11:59:09 AM (IST)



வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மழை குறுக்கிட்டதால் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களும் எடுத்தன. 

183 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை அதிரடியாக ஆடிய இந்தியா 12.2 ஓவர்களில் 100 ரன் திரட்டியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகத்தில் 100 ரன்களை தொட்ட அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்காளதேசத்துக்கு எதிராக இலங்கை 13.2 ஓவர்களில் 100 ரன்களை வேகமாக எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த 22 ஆண்டு கால சாதனையை இந்தியா முறியடித்தது.

கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 38 ரன்களும் விளாசினர். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 33 பந்துகளில் அரைசதம் நொறுக்கினார். இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து, வெஸ்ட் இண்டீசுக்கு 365 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இஷான் கிஷன் 52 ரன்களுடனும் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 29 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதையடுத்து மழை விடாமல் பெய்ததால் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.  இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory