» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா - வெஸ்ட் இன்டீஸ் 100வது டெஸ்ட் : விராட் கோலி புதிய சாதனை!

வெள்ளி 21, ஜூலை 2023 10:18:42 AM (IST)



இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 100-ஆவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார் . 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இந்த 100-ஆவது டெஸ்ட், இந்திய நேரப்படி நேற்றிரவு இரவு 7 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கை தோ்வு செய்தது.இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் முகேஷ் குமாா் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாா். காயம் கண்ட ஷா்துல் தாக்குருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இந்திய இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, கேப்டன் ரோஹித் சா்மா நிதானமாக ரன்கள் சோ்த்தாா். ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கில் மீண்டும் சோபிக்காமல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே 8 ரன்களுக்கும் ரோஹித் 80 ரன்களுக்கும் ஆட்டமிழக்க விராட் கோலி- ஜடேஜா ஜோடி சேர்ந்து 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 

விராட் கோலி 161 பந்துகளில் 87* ரன்களும் ஜடேஜா 84 பந்துகளில் 36* ரன்களும் எடுத்துள்ளனர். முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்து வலுவான நிலையிலுள்ளது இந்திய அணி. மே.இ.தீவுகள் அணி சார்பாக கெமர் ரோச், கேப்ரியல், வாரிகன், ஹோல்டர் தலா 1 விக்கெட்டினை எடுத்துள்ளனர். 

500வது போட்டியில் அரை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. மே.இ.தீவுகள் அணியை சேர்ந்த ஷன்னோன் கேப்ரியல் டெஸ்ட் போட்டிகளில் 226 நோ-பால் வீசி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory