» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வலைப்பயிற்சியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா: மீண்டும் அணிக்கு திரும்புகிறார்!

புதன் 19, ஜூலை 2023 5:12:10 PM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என எந்த தொடரிலும் பும்ரா விளையாடவில்லை.

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்த பின்னர் நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த பின்னர் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடி வருகிறது.

இதையடுத்து அயர்லாந்து அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் பும்ரா இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்தான அதிகார்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பின்னர் இனி வரவுள்ள முக்கியமான தொடர்களான ஆசியக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பையில் பும்ராவை விளையாட வைக்கும் நோக்கில் பிசிசிஐ செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் பும்ரா விரைவில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory