» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி சாதனையை முறியடித்தார் பென் ஸ்டோக்ஸ்!

திங்கள் 10, ஜூலை 2023 5:10:55 PM (IST)



டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 முறை 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து தோனியின் சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார். 

32 வயதான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொறுப்பேற்றார். 95 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் 6021 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும். ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்று 17 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஷஸ் 3வது போட்டியில் ஆஸி. அணியை வீழ்த்தி தொடரில் 1-2 என மீண்டெழுந்துள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றதில் தோனி தலைமையிலான அணி 4 முறை இதை வெற்றிகரமாக செய்துள்ளது. 

ஆஷஸ் போட்டியின் 3வது டெஸ்டினை வென்றதன் மூலம் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி 5 முறை 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நட்சத்திர கேப்டன் தோனியின் சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.  4வது ஆஷஸ் போட்டி ஜூலை 19ஆம் நாள் தொடங்க உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory