» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி மட்டுமே விளையாடி கோப்பைகளை பெற்றுத் தரவில்லை: ஹர்பஜன் காட்டம்!!

திங்கள் 12, ஜூன் 2023 5:18:28 PM (IST)

தோனி ஒருவர் மட்டுமே தனியாக விளையாடி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்தார் என ஹர்பஜன் விமர்சித்துள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 10 வருடங்களாக இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை. தோனி தலைமையில் 2013இல் வென்றதே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் தோனியை புகழ ஆரம்பித்தனர்.  தோனி ரசிகர் ஒருவர் ட்விட்டரில், "பயிற்சியாளர்கள் இல்லை, முக்கியமான வீரர்கள் இல்லை, இளம் வீரர்கள், கேப்டன்சியில் முன்னனுபவமில்லை. இருந்தும் நல்ல பார்மில் இருந்த ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வென்றது” எனக் குறிப்பிட்டு இருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் அந்த ட்விட்டை எடுத்து கிண்டலாக பதிவிட்டு இருந்தார். அதில், "ஆமாம், இந்தப் போட்டிகளில் இவர் ஒருவர் மட்டுமே விளையாடினார். மற்ற 10 பேர்கள் விளையாடவில்லை. அதனால் அவர் தனியாக விளையாடி உலகக் கோப்பைகளை வென்றுவிட்டார்...ஆஸி. அல்லது மற்ற நாடுகள் வெற்றி பெற்றால் அவர்களது பெயரிருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் கேப்டன்களின் வெற்றி என இருக்கும். (சிரிப்பு எமோஜி). இது குழு விளையாட்டு. வெற்றியும் தோல்வியும் குழுவோடு சம்பந்தப்பட்டது” எனக் கூறியிருந்தார். 

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory