» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி: தோனி நெகிழ்ச்சி!!

திங்கள் 24, ஏப்ரல் 2023 10:17:01 AM (IST)



நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்நிலையில், தனக்கு பிரியாவிடை கொடுக்க முன்வந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி என்று போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசன் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி தொடராக இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஹோம் போட்டிகள் மட்டுமின்றி அசலூரில் நடைபெறும் ‘அவே’ போட்டிகளின்போதும் ரசிகர்களின் ஆதரவு அமர்க்களமாக உள்ளது. மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து இதைச் சொல்ல முடியும். சென்னை அணி மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடப்பு சீசனில் விளையாடிய போட்டிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

ஓய்வு பெற உள்ளாரா என்பதே சஸ்பென்ஸ்தான். ஆனால், அதில் அடிபடும் பெயர் கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய ஆளுமை. சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஒருவருக்கு கொடுக்கப்படும் கவுரவம் இது. அவர் விளையாடிய கடைசி சர்வதேசப் போட்டி அவ்வளவாக கொண்டாடப்படவில்லை. அதோடு ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற ஒரு கிரிக்கெட் வீரருக்கு/தலைவனுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு இது.

"மைதானத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து சிஎஸ்கே-வுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு தெரிந்து அடுத்தப் போட்டியின்போது இவர்கள் அனைவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜெர்ஸியில் வருவார்கள் என நினைக்கிறேன். இதன்மூலம் அவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க முன்வந்துள்ளனர். கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி” என தோனி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory