» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது - கவாஸ்கர் புகழாரம்

செவ்வாய் 18, ஏப்ரல் 2023 12:09:00 PM (IST)

தோனியை போன்ற ஒரு கேப்டனை இனி பார்க்க முடியாது என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது நன்கு தெரியும். 

தோனியின் கேப்டன்ஷிப்பில் மட்டுமே இது சாத்தியமாகும். 200 ஆட்டங்களுக்கு தலைமை தாங்கி இருப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். இவ்வளவு போட்டிகளில் கேப்டனாக இருப்பது ஒரு சுமையாகும். இது அவரது ஆட்ட திறனையும் பாதிக்கும். தோனி சற்று வித்தியாசமான கேப்டன். அவரை போன்று கேப்டன் யாரும் இருந்தது கிடையாது. வருங்காலத்திலும் அவரை போன்ற ஒரு கேப்டனை பார்க்கவும் முடியாது' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory