» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி: நடிகர் மாதவன் மகன் 5 தங்கம் வென்றார்!

செவ்வாய் 18, ஏப்ரல் 2023 11:38:12 AM (IST)

மலேசியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் ஐந்து தங்கம் வென்றார்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் 17, பங்கேற்றார். சிறப்பாக செயல்பட்ட இவர் 50,100, 200, 400, 1500 மீ., போட்டியில் தங்கம் வென்றார்.

இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ள மாதவன்,' கடவுளின் ஆசியால் எனது மகன் வேதாந்த் 5 தங்கம் வென்றுள்ளான். இதை எண்ணி பெருமை அடைகிறேன்,' என, தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடந்த தேசிய 'ஜூனியர்' நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் தங்கம் வென்றிருந்தார். தற்போது, சர்வதேச அளவிலும் சாதித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory