» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காதலி முன்னிலையில் சதம்: ஹாரி ப்ரூக் நெகிழ்ச்சி!

சனி 15, ஏப்ரல் 2023 4:02:42 PM (IST)



"ஐபிஎல் போட்டியில் எனது சதத்தை பார்த்து காதலி உட்பட குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று ஹாரி ப்ரூக் கூறினார்.

16வது ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணியை சேர்ந்த ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்தது குறித்து பேட்டியில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது காதலி இங்கே இருக்கிறார். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory