» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நடுவர்களை விமர்சனம் செய்ததற்காக அஸ்வினுக்கு 25% அபராதம் விதிப்பு!

வெள்ளி 14, ஏப்ரல் 2023 4:55:38 PM (IST)



நடுவர்களை பகிரங்கமாக விமர்சித்ததற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

16-வது ஐபிஎல் சீசனில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில், ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை அணியை அதன் கோட்டையிலேயே வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டிக்கு பிறகு நடுவர்களை பகிரங்கமாக விமர்சித்ததற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின், களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் தன்னை "அதிர்ச்சியடையச் செய்தன”. சிஎஸ்கே இன்னிங்ஸின் போது நடுவர்கள் பந்தை மாற்றுவதற்கு அஸ்வின் எதிர்ப்பு தெரிவித்தார். பந்துவீச்சு தரப்பு கேட்காமல் ரன் சேஸின் போது மேட்ச் ஆபீசர்கள் பந்தை மாற்றியது ஏன் என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.

நடுவர்கள் பணிக்காக பந்தை சொந்தமாக மாற்றியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது இதற்கு முன் நடந்ததில்லை, நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன் என விமர்சித்திருந்தார். அவரது கருத்து 2.7 வது விதியை மீறியதாகக் கருதப்பட்டது. இது வீரர்கள் போட்டி அதிகாரிகளை வெளிப்படையாக விமர்சிப்பதையோ அல்லது போட்டியில் நிகழும் எந்தவொரு சம்பவம் குறித்து தகாத கருத்தை கூறுவதையோ தடைசெய்கிறது. இந்த சமயத்தில், ஐபிஎல் நடத்தை விதிகளை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory