» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மின்னோளி கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி!!

செவ்வாய் 28, மார்ச் 2023 11:17:01 AM (IST)தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத், மணிநகரில், காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மின்னோளி கபடி போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற தூத்துக்குடி கள்ளன்பரம்பூர் அணியினர். 

அமரர் கராத்தே செல்வின் நாடார் நினைவு மின்னொளி கபாடி போட்டி கடந்த மார்ச் 25, 26 ஆகிய தினங்களில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐஜினஸ் அவர்கள் தலைமையில், மணிநகர் 3ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 58 அணிகள் பங்கேற்று இரவு பகலாக ஆட்டம் நடைபெற்றது.

இதில், மார்ச் 26 இல் நடைபெற்ற நேற்றைய இறுதிப் போட்டியில் தூத்துக்குடி கள்ளன்பரம்பூர் மற்றும் மணிநகர் அணியினரும் மோதிய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி முதல் பரிசை வென்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது.இரண்டாவது இடத்தில் 3ஸ்டார் கிளப் மணிநகர் அணியும் மூன்றாவது இடத்தில் M.K பிரதர்ஸ் அரசாங்கநகர் அணியும் வெற்றி பெற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நாசரேத் காவல் துறை துணை ஆய்வாளர் ராய்ஸ்ட்டன், நாசரேத் தி.மு.க நகர செயலாளர் ஜமீன் சாலமோன், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, நகர தி.மு.க துணை செயலாளர் ஜேம்ஸ், முன்னாள் தி.மு.க நகர செயலாளர் ரவி செல்வகுமார், தி.மு.க பிரமுகர் சாமுவேல், வணிக சங்க தலைவர் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory