» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை: 5 கி.மீ கடக்க அரை மணி நேரம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:36:58 AM (IST)

விளாத்திகுளம் அருகே மாதலாபுரம் - கந்தசாமிபுரம் இடையே உள்ள 5 கிலோமீட்டர் கிராமப்புறச் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் இருந்து கந்தசாமிபுரம் வரை மொத்தம் 15 கிலோமீட்டர் தூரமாகும். இதில் புதூரிலிருந்து மாதலாபுரம் வரையிலான 10 கிலோமீட்டர் தொலைவு நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஆனால், மாதலாபுரம் கிராமத்திலிருந்து கந்தசாமிபுரம் வரையிலான 5 கிலோமீட்டர் தொலைவு ஊராட்சி ஒன்றியப் பகுதிக்க his கிராமப்புறச் சாலையாக உள்ளது. இந்தச் சாலை முற்றிலும் ஜல்லிகள் பெயர்ந்து, குழியும் மேடுமாக மாறியுள்ளது.
இதனால் கந்தசாமிபுரம், P. ஜெகவீரபுரம், புதுச் சின்னையாபுரம், சேர்வைகாரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையிலுள்ள துத்திநத்தம், பெருநாழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரசாத் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: "மாதலாபுரம் முதல் கந்தசாமிபுரம் வரையிலான இந்தச் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போதைய ஆட்சிக் காலத்திலும் சரி, இச்சாலையைச் சீரமைக்கவோ அல்லது புதிய சாலை அமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அடிக்கடி பழுதாகி நிற்கின்றன.
வெறும் 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட இச்சாலையைக் கடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகிறது. அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட உரிய நேரத்தில் வர முடியாமல் கர்ப்பிணிப் பெண்களும், நோயாளிகளும் அவதியுறுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை. புதிய பேருந்துகளை இயக்கி என்ன பயன்? அதற்கு ஏற்ற வகையில் சாலை வசதி இல்லையே!" எனக் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் கல்வி மற்றும் அவசர மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்தும் வகையிலும், சேதமடைந்த இந்த 5 கிலோமீட்டர் சாலையை உடனடியாகச் சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டம் : ரூ.2.51 கோடி ஆலோசனைக் குழு டெண்டர் வெளியீடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 9:23:56 PM (IST)

குச்சி மிட்டாய் அளவுக்குக் கூட பயனில்லாத வேளாண் பட்ஜெட்! - கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:10:07 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் ஆதார் மூலம் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 9:10:51 AM (IST)

உங்கள் எஸ்.ஐ.ஆர். படிவம் அப்டேட் ஆகிவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?
புதன் 26, நவம்பர் 2025 4:23:16 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 3:43:46 PM (IST)

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்: ஆயத்த பணிகள் விரைவில் தொடக்கம்!
புதன் 11, செப்டம்பர் 2024 10:49:54 AM (IST)









அடேய்Aug 6, 2026 - 12:52:47 PM | Posted IP 104.2*****