» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்: ஆயத்த பணிகள் விரைவில் தொடக்கம்!

புதன் 11, செப்டம்பர் 2024 10:49:54 AM (IST)

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவதற்காக ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருச்சி - திருவனந்தபுரம், கோவை-சென்னை உள்பட பல நகரங்களுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்குகின்றன. 

பெரும்பாலும் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வகையில் தற்போது நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி திருவனந்தபுரத்துக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

திருவனந்தபுரம், தூத்துக்குடியில் துறைமுகங்கள் உள்ளன. அதை சார்த்த பல்வேறு தொழில் நிமித்தங்களுக்கான ஆயிரக் கணக்கானவர்கள் இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களுக்கும், திருவனந்தபுரத்துக்கும் ஆயிரக் கணக்கான மக்கள் செல்கிறார்கள். 

இந்த மக்களின் வசதிக்காக இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் தூத்துக்குடி திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக மாறி உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர இருக்கிறது. திருவனந்தபுரத்தில் ஐ.எஸ் ஆர்.ஓ. மையம் அமைந்துள்ளது.

குமரி, திருநெல்வேலி எல்லையில் மகேந்திரகிரியில் ஐ.எஸ்.ஆர்.ஓ. மையம் அமைந்துள்ளது. தொழில் சார்ந்த பல்வேறு விஷயங்கள் தூத்துக்குடி, திருவனந்தபுரம் நகரங்களில் உள்ளன. எனவே இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்விட்டபல தரப்பட்ட மக்களின் நலன்களுக்கான இரு நகரங்களுக்கும் இடையே இன்டர்சிட்டி ரயில் சேவை என்பது உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக ரயில்வே துறைக்கு, நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் டவுன் ரயில்வே நகரை சேர்ந்த மோகன் என்பவர் ரயில்வே துறைக்குகோரிக்கை மனு அனுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடி - திருவனந்தபுரம் இடையே நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்குவதற்கான பரிசீலனை உள்ளது. விரைவில் இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும் என கூறி உள்ளது. 

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்துகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து முழுமையாக இயங்கும் பட்சத்தில் இந்த வழித்தடங்களில் இட நெருக்கடி குறையும். எனவே கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். அந்த வகையில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி. விழுப்புரம் வழியாக சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக் கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.


மக்கள் கருத்து

muthuSep 27, 2024 - 12:10:09 PM | Posted IP 162.1*****

Tuticorin to Tiruchendur direct new line to be erected and will be helpful for the pilgrims.

Sakthivel @ TuticorinSep 22, 2024 - 10:34:49 PM | Posted IP 162.1*****

Thiruvananthapuram to Tirunelveli Junction all terminated trains are Extended to Tuticorin very very useful For Tuticorin Train Passangers

NatarajanSep 17, 2024 - 11:29:21 AM | Posted IP 162.1*****

Thrichy intercity extended upto Thanjavur so it is help us

JoySep 17, 2024 - 04:25:35 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து காலையில் கிளம்பி chennai egmore, beach, central வழியாக இரவில் விசாகப்பட்டினம் சென்றடையும் படி இரயில் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் தூத்துக்குடி மக்களின் காலை நேர சென்னை இரயில் வசதி கனவு நனவாகும்.

கனிSep 16, 2024 - 10:25:26 AM | Posted IP 172.7*****

50 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 2 விரைவு ரயில் இயங்கியது. ஒன்று கார்டு லைனிலும் ஒன்று மெயின் லைனிலும் இயங்கிற்று. 50 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லையா,ஜனத்தொகை கூடவில்லையா, மக்கள் தேவைகளை அரசாங்கமும் அதிகாரிகளும் நினைப்பதில்லை. மக்களைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்

UmarajeshSep 15, 2024 - 11:09:44 PM | Posted IP 172.7*****

There should be another train from Chennai to Tuticorin

SureshSep 15, 2024 - 07:17:06 PM | Posted IP 162.1*****

மக்கள் பயனடைவர்

DanielSep 15, 2024 - 02:02:42 AM | Posted IP 162.1*****

How about the Thoothukudi - Arupukottai - Madurai new BG line, which has been pending more than 10 years?

பெருமாள்Sep 13, 2024 - 09:03:35 PM | Posted IP 162.1*****

திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலுக்கு நான்குநேரியில் நிறுத்தம் கொடுத்தால் அதுவே பெறும் பொக்கிஷமாக கருதபடுவர்.

நான் கடவுள்Sep 13, 2024 - 05:12:03 PM | Posted IP 172.7*****

இந்த இன்டர் சிட்டி வண்டியை நாகர்கோவில் டவுன் வழியாக மட்டுமே இயக்க வேண்டும்... பல வண்டிகள் நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து கிளம்புவதால் இந்த வண்டியை நாகர்கோவில் டவுன் வழியாக மட்டுமே இய க்க வேண்டும்...ஏறுபவர்கள் டவுன் வந்து ஏறட்டும்

கண்ணன்Sep 13, 2024 - 04:18:11 PM | Posted IP 162.1*****

திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயிலே காத்தாடுது.

சரவணன்Sep 13, 2024 - 02:59:06 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி to திருவண்ணாமலை ட்ரெயின் விட வேண்டும்

NijamudeenSep 13, 2024 - 09:32:07 AM | Posted IP 172.7*****

இந்த இரயில் திருநெல்வேலி மார்க்கமாக செல்வதால் மேலப்பாளையம் இரயில் நிலையம் நிறுத்தம் அமைத்தால் அப்பகுதி மக்கள் பயன்பெறுவர்.மேலப்பாளையம் இரயில் நிவையம் நான்கு பிளாட்பாரம் இரண்டு கிராசிங் அமயப்பெற்று இப்ப மிக சிறப்பாக இருக்கிறது.அனைத்து இரயில்களும் நின்று சென்றால் தான் இரயில்வே துறைக்கும் அதை சார்ந்த மக்களுக்கும் வருவாய் அதிகமாய் ஊர்நகரம் செழிக்கும் மத்திய மாநிலம் சிறப்பாகும்.இது நெடுங்காலமாக மேலப்பாளய மக்களின் கனவு!சமூக ஆர்வலர் நிஜாமுத்தீன்.

MahedhSep 13, 2024 - 06:28:22 AM | Posted IP 172.7*****

We want a train service 1.MadurI-Coimbatore-Salem intercity express 2.coimbatore-Salem-Cuddalore-Karaikal 3.coimbatore-villupuram-TVmalai-Katpadi fast passenger

மணிSep 13, 2024 - 06:17:02 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி டூதிருப்பதிமாதம்ஒருமுறைரெயில்இயக்கபடவேண்டும்

மணிSep 13, 2024 - 06:13:38 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி டூதிருப்பதிமாதம்ஒருமுறைரெயில்இயக்கபடவேண்டும்

மணிSep 13, 2024 - 06:11:40 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி டூதிருப்பதிமாதம்ஒருமுறைரெயில்இயக்கபடவேண்டும்

HASAN ABDUL KADERSep 12, 2024 - 10:49:37 PM | Posted IP 172.7*****

திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வழியாக தூத்துக்குடிக்கு நேரடி ரயில் வேண்டும்.hasan abdul kader

JoshuaSep 12, 2024 - 09:10:52 PM | Posted IP 162.1*****

திருச்செந்தூரிலிருந்து பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் அல்லது தாதன்குளம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறிய நிலையில் இன்று வரை எந்த செயலும் செய்யவில்லை தயவு செய்து அதை விரைந்து நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஜீ வணக்கம்

GaneshSep 12, 2024 - 07:25:57 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி திருச்செந்தூர் நேர்வழியில் ரயில் பாதை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சி செய்ய வேண்டும்

ஹென்றிSep 12, 2024 - 02:55:26 PM | Posted IP 172.7*****

மிக்க மகிழ்ச்சி. அதேசமயம் சென்னைக்கு கூடுதல் ரயில் ஒன்று விட வேண்டும். இதுவும் பயணிகளின் நீண்ட கால கோரிக்கை. எனவே ரயில் நிர்வாகம் தூத்துக்குடி சென்னை பகல் நேரமோ அல்லது இரவிலோ தஞ்சாவூர் திருவாரூர் வழியாக இரு மார்க்கங்களிலும் ரயில் விட்டால் முத்து நகர் விரைவு வண்டியில் காத்திருப்போர் பட்டியல் குறைந்து அனைவருக்கும் ரயிலில் இடம் கிடைக்கும்.

ஹென்றிSep 12, 2024 - 02:55:24 PM | Posted IP 162.1*****

மிக்க மகிழ்ச்சி. அதேசமயம் சென்னைக்கு கூடுதல் ரயில் ஒன்று விட வேண்டும். இதுவும் பயணிகளின் நீண்ட கால கோரிக்கை. எனவே ரயில் நிர்வாகம் தூத்துக்குடி சென்னை பகல் நேரமோ அல்லது இரவிலோ தஞ்சாவூர் திருவாரூர் வழியாக இரு மார்க்கங்களிலும் ரயில் விட்டால் முத்து நகர் விரைவு வண்டியில் காத்திருப்போர் பட்டியல் குறைந்து அனைவருக்கும் ரயிலில் இடம் கிடைக்கும்.

Alwin Jose MSep 12, 2024 - 11:54:13 AM | Posted IP 162.1*****

Now kochuveli Nagercoil train can be extended to Tuticorin or thiruchendure

PerumalSep 12, 2024 - 10:47:13 AM | Posted IP 162.1*****

இந்த ரயிலை நான்குநேரி நிலையத்தில், நிறுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும், பஸ் நிலையமும் ரயில் நிலையமும் அருகில் இருப்பதால் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.நன்றி.

பி.கண்ணாSep 12, 2024 - 04:15:49 AM | Posted IP 162.1*****

மத்திய ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும் ரயில்வேநிருவாகத்துக்கு மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி டூ திருவனந்தபுரம் பரிந்துரைத்த தூத்துக்குடி மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் இந்த அறிவிப்பு நல்ல பலனை தரும்

M. KannanAug 15, 1726 - 07:30:00 AM | Posted IP 162.1*****

I am waiting bro 💐💐❤️❤️💝🙏🙏

SenthiSep 12, 2024 - 12:06:26 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி - கோவை திருச்செந்தூர் - கோவை

RajanSep 11, 2024 - 11:34:37 PM | Posted IP 162.1*****

Welcome 🙏

Kumar PalaniveluSep 11, 2024 - 11:01:06 PM | Posted IP 172.7*****

One train is required from Thiruvananthapuram to Bangalore via Tirunelveli, Madurai, Salem and Hosur. Nowadays all bangalore trains are going to Bangslore via Palakkad and it's take more home of travel.

Ambedhkar ISep 11, 2024 - 10:22:29 PM | Posted IP 172.7*****

நாகர்கோவில் அருகாமையில் குலசேகரன்புதூர் என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரில் நாகர்கோவில் ஈஸ்ட் எனும் பெயரில் ரயில் நிறுத்தம் ஏற்படுத்தினால் நாகர்கோவில் டவுன் போன்று மற்ற பகுதி அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை தாலுக்கா மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

செய்யதுஉமர்Sep 11, 2024 - 09:10:21 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைத்து ரயில் சேவை நடைபெறும்

சுந்தர்Sep 11, 2024 - 09:07:26 PM | Posted IP 172.7*****

Super 👌

Gengusamy தூத்துக்குடிSep 11, 2024 - 07:59:58 PM | Posted IP 172.7*****

இது மட்டும் நடந்தால் கடவுளுக்கு கோடி நன்றிகள். தூத்துக்குடி திருவனந்தபுரம் விரைவு வண்டிக்காக காத்திருக்கிறோம்.அனைவரும் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

INDIRAN S.M.Sep 11, 2024 - 05:40:10 PM | Posted IP 172.7*****

Tuticorin to Ernakulam train via palani pollachi train vendum

INDIRAN S.M.Sep 11, 2024 - 05:39:22 PM | Posted IP 162.1*****

Tuticorin to pollachi train vendum

Brittoமே 27, 1726 - 10:30:00 PM | Posted IP 172.7*****

Yes please, early morning like 5am departure from Thoothukudi is good

Rohit rajamaniSep 11, 2024 - 03:16:59 PM | Posted IP 172.7*****

👌👍💐🙏👑

shafiSep 11, 2024 - 02:25:49 PM | Posted IP 162.1*****

Please proceed. its very very useful to public

ArumugamSep 11, 2024 - 11:32:23 AM | Posted IP 172.7*****

திருவனந்த புரம்.-தூத்துக்குடி இயக்கபட இருக்கிற புகைவண்டியை நாகர்கோவிவ் டவுண் வழியாக நாகர்கோவில் சந்திப்பு ஜங்சன் வழி நிறுத்தம் கொடுத்து பின்பு திருநெல்வேலி, வழியாதூத்துக்குடி வரை இயக்கினால் கன்னியாகுமரி மாவட்ட மக்களும். பல மக்கள் பயனைடைவார்கள். நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory