» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வி : வழக்கு தொடர உதயநிதி ஸ்டாலின் முடிவு

செவ்வாய் 5, மே 2026 5:20:51 PM (IST)

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தொடர்பாக, திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83,374 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முடிவால் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ஆனால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், திருப்பத்தூர் போன்ற முக்கியத் தொகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத் தோல்விகள் குறித்து அக்கட்சி சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory