» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை- நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
செவ்வாய் 5, மே 2026 12:25:58 PM (IST)
விஜய் நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும். மக்களுக்கான நற்பணிகளை அவர் முன்னெடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி சான்றிதழை பெற்றார். அதனை தொடர்ந்து அவரிடம் த.வெ.க.விற்கு ஆதரவு தருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா, நாங்கள் மதசார்பற்ற வெற்றி கூட்டணியில் உள்ளோம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது: புதிதாக ஆட்சி அமைக்கப்போகிறவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துகள். முதல்முறையாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக செல்லவிருக்கிறேன், அங்கு விருத்தாசலம் மக்களுக்காக பேசுவேன்.
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை அவரது வெற்றிக்கு வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது, பக்கத்து வீட்டில் இருந்தவர், கேப்டனுடன் ஆரம்பம் முதலே பழகியவர். விஜய் நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பனையூரில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்: தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு!
செவ்வாய் 5, மே 2026 3:40:03 PM (IST)

தேர்தல் தோல்வியால் விபரீத முடிவு : அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!
செவ்வாய் 5, மே 2026 12:51:25 PM (IST)

பயணத்தைத் தொடர்வோம். மீண்டும் வெல்வோம் - தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 5, மே 2026 11:56:41 AM (IST)

தனிப்பெரும் கட்சியானது தவெக: ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம்!
செவ்வாய் 5, மே 2026 10:37:05 AM (IST)

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா பெரும் சரிவு: தி.மு.க. கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றியது!
செவ்வாய் 5, மே 2026 8:56:19 AM (IST)

தென்காசியில் 4 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக கூட்டணி: சங்கரன்கோவில் அதிமுக வசமானது!
செவ்வாய் 5, மே 2026 8:52:28 AM (IST)









