» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விதிகளை மீறி திமுகவினர் ரூ.8,000 கூப்பன் விநியோகம் : தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
புதன் 15, ஏப்ரல் 2026 5:11:00 PM (IST)
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுகவினர் வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்களை வழங்கி வருவதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க 'இல்லத்தரசி திட்டம்' மூலம் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத சூழலில், தற்போதே பல தொகுதிகளில் திமுகவினர் மாதிரி கூப்பன்களை (Sample Coupons) விநியோகிப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
அதிமுக மாநில வழக்கறிஞரணி துணைச் செயலாளர் ஆர்.ஏ.எஸ். செந்தில்வேல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் திமுகவினர் இந்த விதிகளை மீறிச் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பர்கூரில் மதியழகன் ஆகியோரின் ஆதரவாளர்கள், வரிசை எண்களுடன் கூடிய கூப்பன்களை டோக்கன்களாக வழங்கி வருகின்றனர். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அப்பட்டமான தேர்தல் விதிமீறலாகும்.
தேர்தலில் முறைகேடாக வாக்குகளைப் பெறும் நோக்கில் திமுகவினர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு விநியோகம் செய்யப்பட்ட கூப்பன்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடுபுகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு: கஞ்சா போதை இளைஞர் கைது; இருவருக்கு வலை!
புதன் 15, ஏப்ரல் 2026 5:19:42 PM (IST)

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் மோசடியால் இளம்பெண் தற்கொலை: விஜய் குற்றச்சாட்டு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:53:13 PM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது ஒரு குற்றமா? மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:31:08 PM (IST)






