» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் ஏப். 15ல் பிரதமருடன் பிரசாரம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கள் 6, ஏப்ரல் 2026 5:39:23 PM (IST)

வருகிற ஏப். 15 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் கன்னியாகுமரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்துகொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 8 ஆவது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது "திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுக திட்டங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் கொண்டுவரப்படும். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெல்லும். எடப்பாடி தொகுதியில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன். 

நான் வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி தொகுதியில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. திமுக ஏன் தில்லியுடன் போட்டி போட வேண்டும்? திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.

வருகிற ஏப். 15 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் கன்னியாகுமரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்துகொள்கிறேன். அதிமுகதான் பிரதான கட்சி, தற்போதைய எதிர்க்கட்சி. திமுக - தவெக இடையில்தான் போட்டி எனக் கூறுவது தவெக தலைவர் விஜய்யின் அறியாமையின் வெளிப்பாடு. முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது வீட்டுச் சிறையில் இருந்ததாக ஆ. ராசா கூறியதைத்தான் நான் கூறினேன். அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory