» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல் துறையின் அனுமதி உத்தரவில் அதிருப்தி: தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!

திங்கள் 6, ஏப்ரல் 2026 11:42:19 AM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த அவரது பிரசாரப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் முக்கியத் தொகுதிகளான வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய நான்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று (திங்கள்கிழமை) பிரசாரம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காகக் காவல் துறையிடம் உரிய அனுமதி கோரி அக்கட்சியின் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.

காவல் துறையினர் வழங்கிய அனுமதி உத்தரவில், கடுமையான நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. வில்லிவாக்கம் - மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை. தி.நகர்: மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை. இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே பயணிப்பதற்கும், பிரசாரம் செய்வதற்கும் வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனத் தவெக தரப்பில் கூறப்படுகிறது. 

ஒரு மணி நேர இடைவெளியில் வில்லிவாக்கத்தில் இருந்து தி.நகருக்குச் சென்று பிரசாரத்தைத் தொடங்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என அக்கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறைந்த கால அவகாசத்தில் வாக்காளர்களை முழுமையாகச் சந்திக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய சென்னை பிரசாரப் பயணத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகத் தவெக தலைமை அறிவித்துள்ளது. இதனால் உற்சாகத்துடன் காத்திருந்த அக்கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory