» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு

திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)



தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஸ்தவா மற்றும் செலவினப் பார்வையாளர் நரேந்திர ஏசரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இன்று (05.04.2026) பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஸ்தவா, அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்குச் சென்றார்.    அம்பாசமுத்திரத்தில் வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் பலகையைப் பார்வையிட்டார்.

நாங்குநேரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு அறை (Strong Room), கட்டுப்பாட்டு அறை மற்றும் அங்கிருந்த சிசிடிவி கேமரா கண்காணிப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, பல்வேறு பகுதிகளில் சோதனைப் பணிகளைப் பார்வையாளர் ஆய்வு செய்தார்:

பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினரின் (SST) செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இராதாபுரம் தொகுதியில் பறக்கும் படை குழுவினர் (FST) வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டார்.

அதேபோல், தேர்தல் செலவினப் பார்வையாளர் நரேந்திர ஏசரி, அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி சங்கன்திரடு பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்டு வரும் சோதனைகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, அம்பாசமுத்திரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory