» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்

செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடாமல், சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:    "கூட்டணி கட்சியான அதிமுக கேட்டுக் கொண்டதாலேயே, நெல்லைத் தொகுதிக்குப் பதிலாகச் சாத்தூர் தொகுதியில் போட்டியிடச் சம்மதித்தேன். வேட்பாளர் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்பட்டவுடன் சாத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வேன். எந்தத் தொகுதியில் நின்றாலும் தமிழகம் முழுவதும் எனது மக்கள் பணி தொடரும். நெல்லைக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளை தான்.

திமுக அரசுக்கு எதிராக இன்று மாலை 'குற்றப்பத்திரிகை' தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது: திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த முறை 'ஹீரோ'வாக இருந்த திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை 'ஜீரோ'வாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கே திமுக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கும் சூழல் நிலவுகிறது.

மதச்சார்பின்மை என்று பேசும் திமுகதான் மதம் சார்ந்து இயங்குகிறது. முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார், ஆனால் மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் சமமாக வாழ்த்து தெரிவித்து வருகிறது.

பாஜக தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றித் தேசத்திற்காகவும், கொள்கைக்காகவும் உழைக்கக்கூடியவர்கள். தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, மக்களின் எண்ணமே முக்கியம். வரும் ஏப்ரல் 4-ம் தேதி பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory