» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் மீது வழக்கு: டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்!

செவ்வாய் 31, மார்ச் 2026 3:30:09 PM (IST)



தேர்தல் விதிமீறல் புகாரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இது குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் டி.ஜி.பி ஆகியோருக்குத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட மக்கள் கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகப் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

5 ஒலிபெருக்கிகள் பயன்படுத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், விதிகளை மீறி 30-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களையும் தொண்டர்களையும் திரட்டியது. பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதையை மறைத்து இடையூறு ஏற்படுத்தியதாக விஜய் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, த.வெ.க தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், "விஜய்யின் பிரசாரத்திற்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், காவல்துறையினர் பாரபட்சமாக நடந்துகொள்கின்றனர்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான சரியான காரணங்கள் மற்றும் அங்கு நிலவிய சூழல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கச் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும், டி.ஜி.பி-க்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory