» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ்!

புதன் 11, பிப்ரவரி 2026 12:14:53 PM (IST)


மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் மார்ச் 4-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை மாவட்ட நீதி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்பி உள்​ளது.

மடப்​புரம் காளி​யம்​மன் கோயில் காவலாளி அஜித்​குமார், நகை திருட்டு வழக்கு விசா​ரணைக்​காக தனிப்​படைக் காவலர்​களால் அழைத்​துச் செல்​லப்​பட்​டார். அப்​போது காவலர்​கள் தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்​தார்.

இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் 6 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் ஜாமீன் கோரி தாக்​கல் செய்த மனு, கடந்த வாரம் உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தபோது, அஜித்​கு​மார் மீது நிகிதா என்​பவர் அளித்த நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்று விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ள​தாக​வும், இது தொடர்​பாக விரை​வில் நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​படும் எனவும் சிபிஐ தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி, "செய்​யாத குற்​றத்​துக்​காக ஒரு​வரை போலீ​ஸார் அடித்தே கொலை செய்​துள்​ளனர். போலீ​ஸாருக்கு தக்க பாடம் கற்​பிக்க வேண்​டும். விசா​ரணை முடி​யும் வரை காவலர் சிறை​யிலேயே இருக்​கட்​டும்” என்று கூறி, "பொய் புகார் அளித்த பெண் மீது என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது?” என சிபிஐ​யிடம் கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், அஜித்​கு​மார் காவல் மரண வழக்கை விசா​ரித்​து​வரும் மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில், நகை திருட்டு புகார் அளித்த நிகி​தாவை அழைத்து விசா​ரிக்க அனு​மதி கோரி, சிபிஐ தரப்​பில் மனு தாக்கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை மதுரை மாவட்ட தலைமை குற்​ற​வியல் நீதி​மன்ற நீதிபதி செல்​வ​பாண்டி விசா​ரித்​து, மார்ச் 4-ம் தேதி நிகிதா நீதி​மன்​றத்​தில் ஆஜராக நோட்​டீஸ் அனுப்ப உத்​தர​விட்​டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory