» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை : கனிமொழி எம்.பி. பேச்சு

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:36:33 PM (IST)



திமுக - காங்கிரஸ் இடையே இணக்கமான நல்லுறவு உள்ளது. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., கூறியதாவது : திமுக - காங்கிரஸ் தலைமைகளுக்கு இடையே இணக்கமான உறவு உள்ளது. ஆட்சியில் பங்கு என்பது போன்ற தனிநபர்களின் கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாது. வரும் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்தே சந்திக்கும்; விரைவில் தொகுதிப் பேச்சுவார்த்தை தொடங்கும்.

மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மத அமைப்புகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். 2021 தேர்தலின் போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் சில திட்டங்களைத் தாமதமின்றிச் செயல்படுத்த முடியவில்லை.

மகளிர் மற்றும் மாணவர்களுக்கான திட்டங்களே இந்தத் தேர்தலில் திமுகவின் முதன்மையான பிரச்சாரக் களமாக இருக்கும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர் கவனித்து வருகிறார் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory