» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாதாள சாக்கடை திட்டப்பணியால் சாலை சேதம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:39:20 PM (IST)



திருநெல்வேலி டவுனில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருநெல்வேலி டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டது. அதன் பின்னர் சாலை தற்போது வரை சீர் செய்யப்படாமல் உள்ளன. இந்த கோவிலுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குழந்தைகளுக்கு நோய் தீர்ப்பதற்காக வழிபட்டு வருகின்றனர்.

ஆனால் வரும் வழியில் கான்கிரீட் சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கால் தட்டி கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

BabuDec 10, 2025 - 07:15:22 PM | Posted IP 172.7*****

makakl vairu yerichal la vilunthu kollai adikathengada

செல்வம்Dec 9, 2025 - 06:58:11 PM | Posted IP 162.1*****

திருப்பரங்குன்றம் என்றால் தமிழ் கடவுள் முருகனின் முதற் படைவீடு இதை தமிழ் பூர்வீககுடிகள் ஏற்பதா? மறுப்பதா?பூர்வீகம் என்றால் இங்கே ஒரே தமிழ் கடவுள் முருகன்தானே இதில் சந்தேகம் இல்லை? பின் அந்த மலை மற்றும் முதற் படைவீட்டை வைத்து அனைத்தும் உளடக்கியது தனிநபர், அரசின் வருமானம் மூலம் மலை மற்றும் சுற்று பகுதி சுத்தம் பாதுகாப்பு எல்லாம் பக்கத்தர்களின் நன்கொடை உண்டியல் வருமாம் மூலம் செலவு செய்கிறது அது இந்து அறநிலைதுறை இதற்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது எப்படி அரசு கட்டுப்பாட்டில் உள்ள அறநிலைதுறை கோவிப பணத்தில் வக்கீல் பீஸ் கொடுத்து கோவில் பணத்தை வீண் செலவு தனியார்க்கு எதிர்த்து அரசும் அறநிலைதுறையும் வழக்கு நடத்தலாம் ஆனால் கோவில் வருமானத்தை எடுத்து கோவில்க்கு எதிராக வழக்கு நடத்துவது பெரிய கேவலமான செயல் ஆகும் இதை உண்மையில் நம் தமிழ் கடவுள் முருகன் என்றால் அவரே தீர்ப்பு எழுதட்டும் இறைவனே பெரியவன் இந்த இடத்தில் தமிழ் கடவுள் முருகனே அதற்கான தண்டனை வழங்கட்டும் அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்றுகொல்லும் என்பார்கள் முருகா ஓம் முருகா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory