» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)
தமிழகம், புதுவை மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வருகின்ற டிச. 15 முதல் விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுள்ளன. இதனிடையே, சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்க்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று வியாழக்கிழமை காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ”தமிழ் நாடு சட்டபேரவைப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டபேரவைப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உறுப்பினர்கள், தலைமை அலுவலகத்தில் வருகின்ற 15.12.2025 - திங்கட் கிழமை முதல் 23.12.2025 - செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்;
முதல் நாளான 15.12.2025 அன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:10:06 PM (IST)

சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை குமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:26:54 PM (IST)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:55:29 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)










