» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மழை வெள்ளத்திற்குள் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

வியாழன் 16, மே 2024 12:08:27 PM (IST)



வள்ளியூர் ரயில்வே பாலத்தில் சூழ்ந்திருந்த மழை நீரில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லையில் நேற்று கனமழை எதிரொலியாக வள்ளியூர் ரயில்வே பாலத்தில் சுமார் 4 அடி அளவு உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு 65 பயணிகளுடன் சென்ற பேருந்து வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் சிக்கியது. 

தண்ணீரில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து 40 பயணிகளை தீயணைப்புத் துறையினர் அவசரக் கதவை திறந்து பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் வள்ளியூர் ரயில்வே பாலத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதாகக் கூறியும், பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் ரவிக்குமாரை சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory